2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தமிழர்களின் காணிப் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு எட்டப்படும்: பிரதியமைச்சர் ஸ்ரீபால கமலன

Suganthini Ratnam   / 2011 மே 05 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

நாங்கள் யுத்தத்திற்கு எவ்வாறு நிரந்தரமானதொரு தீர்வைக் கண்டமோ அதேபோன்று தமிழ் மக்களுடைய காணிப் பிரச்சினைக்கும் நிரந்தரமான தீர்வைக் காண்பதற்காகவே காணிப் பயன்பாடு திட்டமிடல் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அலுவலகத்தை திறந்து வைப்பதாக  காணிப் பிரதியமைச்சர் ஸ்ரீபால கமலன் தெரிவித்துள்ளார்.

மேற்படி அலுவலகத்தை இன்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாயற்றுகையில்,

இலங்கையில் இது 20ஆவது அலுவலகம் ஆகும். தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லமுடியுமென்று நம்புகிறோம்.

காணி என்பது பூமியை மையப்படுத்திய ஒரு திட்டம். இந்தத் திட்டத்தின் அடிப்படையில் வடபகுதியில் மீளக்குடியமர்ந்த மக்களுக்கு காணிகளை கொடுத்து அவர்களுக்கு உரித்துடைய நிலங்களில் மீளக்குடியமர்த்தி அவர்கள் அடையும் சந்தோசத்தை நாங்கள் வெகு விரைவில் காண்போம்

விஞ்ஞான மூலம் காணிகளைப் பாதுகாக்கும் சட்டமூலமொன்றை விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ளோம். இதன் மூலம் தமிழ் மக்களுடைய காணிகளைப் பாதுகாக்க முடியும்.

உலக வங்கியிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் நிதியின் மூலம் வடபகுதியில் காணி இல்லாதவர்களுக்கு காணி கொடுப்பதற்கு எமது அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.

தென்பகுதியைப் போன்றே வடபகுதியிலும் நிரந்தரமான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, காணி அமைச்சின் செயலாளர் அசோக் பீரிஸ், வடமாகாண காணிப் பணிப்பாளர் சாந்தி பெர்னாண்டோ, வடமாகாண காணி ஆணையாளர், யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், வடமாகாண காணி அதிகாரிகள், யாழ். மாவட்ட அரசாங்க திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்களெனப் பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X