Suganthini Ratnam / 2011 மே 05 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். காரைநகர் பலகாடுப்பகுதியில் கடற்படையினரால் பெறப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு 57.258 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கவுள்ளதாக காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அசோக் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட அரச செயலகத்தில் காணிப்பயன்பாடு திட்டமிடல் அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
1984 ஆண்டு முதல் யாழ.; காரைநகர் பலகாடுப்;பகுதியில் கடற்படையினரால் பெறப்பட்ட 1,230 சதுரப்பரப்பளவு நிலப்பகுதியிலுள்ள 132 குடும்பங்களின் காணிகளுக்கு 57.258 மில்லியன் ரூபா நஷ்டஈடு எதிர்வரும் வாரம் யாழ். அரசாங்க அதிபரூடாக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடற்படையினர் அப்பகுதியிலிருக்கும் காலம் வரைக்கும் காணி உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கவுள்ளதாகவும் அசோக் பீரிஸ் குறிப்பிட்டார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago