Suganthini Ratnam / 2011 மே 05 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடமராட்சி கிழக்குப் பகுதியில் யுத்த அனர்த்தங்களினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் மிகவும் பாதிக்கப்பட்டு வறுமைக் கோட்டின் கீழ்; வாழுகின்ற வறிய குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய செஞ்சிலுவைச்சங்கம் மேற்கொண்டுள்ளது.
இந்த வீட்டுத்திட்டத்தின் கீழ் தலா ஒரு குடும்பத்துக்கு வீடு அமைப்பதற்காக 3 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவும் மலசலகூடம் அமைப்பதற்காக 25 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படவுள்ளது. மாமுனை, செம்பியன்பற்று, தாளையடி, மருதங்கேணி ஆகிய கிராம அலுவலர் பிரிவிலுள்ள மக்களுக்கே இந்த வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ளது.
இந்த வீட்டுத்திட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து செஞ்சிலுவைச்சங்கப் பிரதிநிதிகளும் மற்றும் சில தொண்டு அமைப்பின் அதிகாரிகளும் வரவுள்ளதாக இலங்கை செங்சிலுவைச்சங்கத்தின் வடமராட்சி பிரிவு தெரிவித்துள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago