2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நல்லைக்குமரன் மலருக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன

Suganthini Ratnam   / 2011 மே 05 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நல்லைக்கந்தனின் வருடாந்த மகோற்சவ காலத்தில் யாழ். மாநகராட்சிமன்ற சைவசமய விவாகாரக் குழுவினால் 2011ஆம் ஆண்டு வெளியிடப்படவுள்ள 19ஆவது நல்லைக்குமரன் மலருக்கான தரமான ஆக்கங்கள், ஆய்வுக்கட்டுரைகள், கவிதைகள் போன்ற ஆக்கங்களை துறைசாந்த அறிஞர்கள், கவிஞர்கள், கல்விமான்கள் மற்றும் சைவப்பேரறிஞர்கள் போன்றவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.

அனைத்து விதமான ஆக்கங்களையும் எதிர்வரும் 30.06.2011 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக தலைவர், சைவசமய விவகாரக்குழு, மாநகரசபை, யாழ்ப்பாணம் என்னும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது

சைவசமய சித்தாந்தத்தை பிரதிபலிக்கும் மிகத் தரமான ஆக்கங்களை எழுதி அனுப்பிவைக்குமாறும் தரமான ஆக்கங்கள் நல்லைக்குமரன் மலரில் பிரசுரிக்கப்படும் என  யாழ். மாநகராட்சி மன்ற சைவசமய விவாகாரக்குழு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X