Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 08 , மு.ப. 11:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்;கு இன்றும் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கின்றார். இதனை நல்ல முறையில் பேசித் தீர்க்க வேண்டும். இது எமக்கு கிடைத்த புதிய சந்தர்ப்பமாகும். தமிழ் மக்ககளுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் ஈழமக்ககள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கும் கடந்த காலத்தில் உரிய வாய்ப்புகள் கிடைத்தபோதிலும,; அதனை இரு கட்சிகளும் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளத் தவறியமையால் தான் இன்று இந்தளவு அழிவுகளும் கஷ்டங்களும் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு பாரம்பரிய கைத்தொழில்கள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார். நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை, இந்திய ஒப்பந்த காலத்தில் நாம் அழிந்து இருப்போம். ஆனால் எம்மை வரதராஜப் பெருமாளும் சுரேஷ் ;பிரேமச்சந்திரனும் காப்பாற்றி விட்டார்கள். அதாவது அவர்கள் அந்தக் காலத்தில் செய்த அட்டகாசத்தினால் மக்கள் எங்களுடன் நின்றார்கள் என புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்தளவுக்கு இந்திய இராணுவம் இங்கு நிலை கொண்டு இருந்த காலகட்டத்தில் வரதராஜப் பெருமாளினதும் சுரேஷ் பிரேமச்சந்திரனினதும் அராஜக செயல்பாடுகள் அதிகரித்துக் காணப்பட்டன. இலங்கை, இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகளான பிரேமதாஸாவுடனும் சந்திரிகா பண்டாரநாயக்காவுடனும் ரணில் விக்கிரமசிங்கவுடனும் மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேசித் தீர்த்து இருக்கலாம். இன்று கூட ஒரு புதிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எமது பிரச்சினைகளை நாமே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும.; இதனை விடுத்து எமது பிரச்;சினையை வேறு யாரும் தீர்த்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.
கடந்த இரண்டாம் உலக மகாயுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட நாடுகளான ஜப்பான,; ஜேர்மனி போன்ற நாடுகள் யுத்தத்தின்போது நடந்தவைகளை மறந்து அமெரிக்காவுடன் கைகொடுத்தன. இன்று இந்த நாடுகள் அமெரிக்காவின உதவியுடன் மிகவும் சிறந்த பொருளாதார வளம்மிக்க நாடுகளாக உலகில் காணப்படுகின்றன. இந்த வகையில் கடந்தகால சம்பவங்களையிட்டு இலங்கை அரசுடன் பழிவாங்கவோ அல்லது முரண்பட்டுக்கொண்டு இருந்தால் நாம் மீண்டும் கடந்த காலத்தைப் போன்று மேலும் முப்பது வருடங்கள் பின்தள்ளிச்செல்லும் நிலைமை ஏற்படலாம்.
அன்று விடுதலைப் போராட்டத்திற்கான தேவை இருந்தது. ஆனால் இலங்கை, இந்திய ஒப்பந்தத்துடன் அந்த நிலைமை இல்லாது போய்விட்டது. அதனை அன்று உரிய முறையில் நாம் பயன்படுத்தி இருந்தால் சுயநிர்ணய உரிமையைக் கூட நாம் பெற்று இருக்க முடியும். இன்று மக்கள் சரியான பாதையை நோக்கி செயல்படுகின்றார்கள். அதற்;கும் கூட சில தடைகளும் பிரச்சினைகளும் கூட காணப்படுகின்றன. இன்று சிலர் யோசிக்கின்றார்கள் தருஸ்மன் அறிக்கை மூலம் அரசைப் பழிவாங்கலாம் வாக்குவேட்டை நடத்தலாம் எனவும் எதிர்பார்க்கின்றார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்புக் கூட உருவாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே காரணமாக இருந்துள்ளது. கடந்தகாலத் தேர்தல்களின்போது இக்கட்சிகள் தனித்து தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெறமுடியவில்லை. உதாரணத்திற்க்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் இரண்டு தடவைகள் தனித்து தேர்தலில் நின்று நடந்தது என்னவென்பதை மக்கள் அறிவார்கள். தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதில் உடன்பாடுகள் இல்லை அதனையும் கூட ஒரு இரவில் செய்யமுடியாது. எது கிடைக்கிறதோ அதனை முதலில் பெற்றுக்;கொள்ள வேண்டும்.13ஆவது அரசியல் திருத்தம் என்பது மேசையில் வைக்கப்பட்ட உணவு போன்றது. அதனை போட்டு சாப்பிட வேண்டியதுதான் முக்கியமாகும்.
13ஆவது அரசியல் திருத்த சட்டம்தான்; ஆரம்பமான நடைமுறைச் சாத்தியமாகும். சாத்தியப்படாத ஒன்றுக்காக சுயலாபத்தின் அடிப்படையில் செயல்படக் கூடாது. அதில் மத்திய அரசு மாநில அரசு மற்றும் இரண்டு அரசுகளுக்கும் இணைந்த பட்டியல் என மூன்று உண்டு. அதில் மூன்றாவதான இரண்டு அரசுகளுக்குமான இணைந்த அதிகாரம் என்பதை நீக்க வேண்டும்.
இரண்டாவது சபையாக மேல்சபையை அல்லது செனட் சபையைக் கொண்டுவர முடியும் மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதில் அதிகாரப் பகிர்வு கொண்டுவரப்பட வேண்டும். பழிவாங்கவும் வாக்கு வங்கிகளுக்காகவும் இவைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஊடகங்கள் தமக்கென ஒவ்வொரு கொள்கை, கோட்பாடுகளையும் கொண்டுள்ளன. அதற்;கு ஏற்ப அவர்கள் செயல்படுகின்றார்கள். உண்மைகளைக் கொண்டுவருவதில் கவனமாக இருப்பதுடன் எதனையும் பேசித் தீர்க்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago