2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சம்பள உயர்வு கோரி இராஜினமா செய்யவுள்ளதாக யாழ். பல்கலை துறைத்தலைவர்கள் அறிவிப்பு

Suganthini Ratnam   / 2011 மே 09 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நாடு பூராகவும் சம்பள உயர்வு கோரி அனைத்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த  துறைத்தலைவர்கள் தமது பதவியை இராஜினமாச் செய்துள்ளனர். இதற்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழக துறைத்தலைவர்களும் சிரேஷ்ட மாணவ ஆலோசகர்களும்  மாணவ ஆலோசகர்களும் இணைப்பாளர்களும் விடுதிக் காப்பாளர்களும்  இன்று திங்கட்கிழமை முதல் தமது பணிகளை இராஜினமாச் செய்யவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் எஸ்.விக்கினேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

'தங்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படாது விட்டால் தொடர்ந்தும் மாற்றுவழியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.  ஒரு கிழமைக்கு இந்;தப் போராட்டம் நீடிக்குமானால் பல்கலைக்கழக செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதமடையும் நிலைமை உருவாகும்' என அவர் கூறினார்.

'சம்பளவு உயர்வு கோரி கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தம் பல்கலைக்கழக துறைசார்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்டது. எனினும், இதற்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று  முதல்  பல்கலைக்கழக பதவிகளிலிருந்து நாம் இராஜினமாச் செய்கிறோம்' என எஸ்.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X