2025 மே 22, வியாழக்கிழமை

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ். பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம்

Suganthini Ratnam   / 2011 மே 09 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பிரதேச  செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  

யாழ். பிரதேசத்தின் அபிவிருத்திகள், மீள்ளெழுச்சித் திட்டம், காசுக்கான வேலைத்திட்டம், யாழ். மாநகரசபையின் வேலைத்திட்டம், வாழ்வாதாரத் திட்டங்கள், முஸ்லிம் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆகியன தொடர்பில் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி;ன் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், எஸ்.சரவணபவன், ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரர் அலென்டின், யாழ். மாநகரசபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா, யாழ். பிரதேச செயலர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரன் கலந்துகொண்டுள்ளனர்.

காணி தொடர்பான பிரச்சினைகள், உணவு விநியோகம், பிரதேச செயலகத்தின் வீடமைப்பு தொடர்பான பிரச்சினைகள், கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள், சமுர்த்தி செயற்பாடுகள், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு, பொதுச்சுகாதாரம், டெங்கொழிப்பு நடவடிக்கைகள், குடிநீர்வசதிகள், வீதி அபிவிருத்தி, மின்சாரம் சிறுகைத்தொழில் ஆகியன குறித்தும் இந்த அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டு தீர்க்கமானதொரு முடிவு எட்டப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X