2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பல்கலை மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் கைது

Super User   / 2011 மே 09 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் யாழ். குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். குற்றத் தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் விக்கிரம ஆராச்சி தெரிவித்தார்.

புதிய மாணவர்களை வரவேற்பதற்கான ஆரம்ப வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களிடையே கடந்த சனிக்கிழமை மோதல் ஏற்பட்டது. இம்மோதல் மீண்டும் ஏற்படாத வண்ணம் பொலிஸார் பல்கலைக்கழகத்துக்குள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், துவிச்சக்கர வண்டிகளை  எடுத்துச் சென்றதாகவும் இவற்றை பெறுவதற்கு பொலிஸ் நிலையத்துக்குச் சென்றபோது கலைப்பீட மற்றும் வணிக முகாமைத்துவ பீட மாணவர்கள் இருவர் பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள் என்ற சந்தேகத்திலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக உப பொலிஸ் பரிசோதகர் விக்கிரம ஆராச்சி தெரிவித்தார்.

இவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X