2025 மே 22, வியாழக்கிழமை

யாழ். பல்கலை மாணவர்களுக்கிடையிலான மோதல்கள் வேதனையளிக்கிறது: மாவை சேனாதிராசா எம்.பி.

Suganthini Ratnam   / 2011 மே 10 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான மோதல்கள் பற்றிய செய்திகள் தமக்கு மிகுந்த வேதனையளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எமது எதிர்கால தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் வளர்ந்து வரும் பாரம்பரியமிக்கதான எமது மாணவர்கள் பொறுமை காத்து பிரச்சினைகளை தமக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று வேண்டிநிற்கிறேன்.

பொலிஸ் மற்றும் இராணுவப் பிரசன்னத்திற்கோ அல்லது தலையீட்டுக்கோ இடமளிக்காத வகையில் யாழ். பல்கலைக்கழக செயற்பாடுகள் தொடர்ந்திருக்க வேண்டுமென்பதுடன், பல்கலைக்கழக மாணவர் சமுதாயம் ஏனைய இளம் சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக திகழ வேண்டுமென்றும் அன்புரிமையுடன் வேண்டிக்கொள்கின்றேன் என அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X