2025 மே 22, வியாழக்கிழமை

யாழில் அரசகரும மொழிகள் கொள்கை அமுலாக்கம் தொடர்பில் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2011 மே 10 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அரசகரும மொழிகள் கொள்கை அமுலாக்கம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்றும் அது பற்றிய விளக்கவுரைகளும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையில் தற்போது யாழ்ப்பாண செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

அரசகரும மொழிகள் கொள்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டரீதியான ஏற்பாடுகள் தொடர்பான விளக்கவுரைகளும் அரசகரும மொழிகள் கொள்கையை அமுல்படுத்துவதில் அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாகவும் இங்கு விவாதிக்கப்பட்டது.   

இங்கு உரையாற்றிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார,

இதுவொரு இறைமையுள்ள தேசம். இருமொழிகள் கொண்ட ஒரு நாடு. சமூகமொழிகளையும் அதன் பயன்பாடுகளையும் சரியான முறையில் இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது. மொழி அமுலாக்கல் பிரச்சினையொன்று இருக்குமானால் அது பற்றி விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும். நாம் அனைவரும் ஒரே நாட்டு மக்கள் என்றார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அப்பாத்துரை விநாயகமூர்த்தி, எஸ்.சரவணபவன், சிவஞானம் ஸ்ரீதரன், ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற   உறுப்பினர்களான சில்வெஸ்ரர் அலென்டின், சந்திரகுமார், அமைச்சின் செயலாளர் விக்கிரமசிங்க, யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்,  திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்களெனப் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X