2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சேந்தான்குளம் மீள்குடியேற்ற மக்கள் குடிநீர் வசதியின்றி சிரமம்

Menaka Mookandi   / 2011 மே 12 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கீரிமலை, சேந்தான்குளம் பகுதி மக்கள் போதிய குடிநீர் வசதியின்றி சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர். கடந்த மாதம் முதல் மீளக்குடியேறிய இந்த மக்கள் வலி வடக்குப் பிரதேச சபையினால் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை பௌசர் மூலம் வழங்கப்படும் மட்டுப்படுத்திய அளவிலான குடிநீரை நம்பியே தமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சுமார் எண்பது குடும்பங்களைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மக்கள் வாழும் இந்தப் பகுதியில் போதியளவு குடிநீர் இன்மையால் அம்மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன் குடிநீர் விடயத்தில் உரிய அதிகாரிகள் கூடிய கவனம் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மட்டுப்படுத்தியளவில் மட்டுமே குடிநீர் கிடைப்பதினால் இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை வழங்கப்படும் பௌசர் மூலமான குடிநீரை நாளாந்தம் வழங்க உரிய நடவடிக்கையெடுக்கப்படுமாக இருந்தால் குடிநீர் பிரச்சினையை ஓரளவுக்கேனும் சமாளிக்க முடியும் என அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X