Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 12 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகத் தொடர்ந்த அகதி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டபோதிலும், மீண்டும் சொந்த ஊர் திரும்பி இயல்பு வாழ்க்கைக்கு தம்மை இணைத்துக்கொள்ள முயலும் வலி. வடக்கில் மீள்குடியமர அனுமதிக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் பதிவுகள் மிகவும் சோகம் ததும்பிய துன்பியலாகவே உள்ளது.
இன்று புதன்கிழமை காலை யாழ். படைகளின் தலைமையகத்திலிருந்து உள்ளூர் ஊடகவியலாளர்கள் அண்மையில் வலி. வடக்கில் மீள்குடியேறிய மக்களை சந்திப்பதற்காக இராணுவ வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வலி வடக்கில் 9 கிராம அலுவலகர் பிரிவுகளில் 3,511 குடும்பங்களைச் சேர்ந்த 12,274 பேர் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டனர். இம்மக்கள் வாழ்ந்த வீட்டு வளாகங்கள் எல்லாம் பற்றைகள் வளர்ந்து ஊரே தெரியாமல் வனாந்தரமாக மாறிக்கிடக்கிறது.
அங்கு சொந்த மண்ணை பார்த்த மகிழ்ச்சியில் மண்ணை முத்தமிடும் முதியவர்கள், இடிந்த வீட்டைப் பார்த்து கண்ணீர் சிந்தி கதறியழும் மக்கள், 21 வருடங்களின் பின்பு மகிழ்ச்சியில் கட்டி அரவணைக்கும் அயல் வீட்டுக்காரர்கள், வீட்டைக் காணும் விருப்பத்தில் ஓடிச்செல்லும் முதியவர்களென பலரைக் காணமுடிந்தது.
'என்னை இந்த மண்ணில்தான் புதைக்க வேண்டும். அப்போது தான் எனது ஆன்மா சாந்தியடையும்' என்கிறார் கொல்லன்கலட்டிப்பகுதியிலிருக்கும் முருகேசு கதிரமலை.
வீடுகளின் அழிவுகளைக் கண்டு கண்ணீர் சிந்தும் வலி. வடக்கு மக்களின் கண்ணீருக்கு விடை கிடைக்குமா? எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் அம்மக்கள் மீள்குடியமர வைக்கப்பட்டு இருப்பது ஏன்? வலி. வடக்கு மக்கள் இருப்பதற்காவது கொட்டில்கள் அமைத்து கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் இவர்களின் வாழ்க்கைப் பயணம் வலிகள் நிறைந்த சிதைந்த வாழ்வுக்கு மீட்சி எப்போ? என பல கேள்விகள் பதில்களுக்காக காத்திருக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago