2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

நெதர்லாந்து, ஈராக் தூதுவர்கள் யாழ். அரச அதிபருடன் சந்திப்பு

Menaka Mookandi   / 2011 மே 12 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் சமாதான நடைமுறைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை, மாலைதீவுக்கான ஈராக் தூதுவர் கஹ்தான் தாஹா கலாவ், நெதர்லாந்து தூதுவர் லியோனி கியூலெனர் ஆகியோர் இன்று யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமாரை அவரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

யாழ்ப்பாணத்திற்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்படுகின்ற அபிவிருத்தி நிதி மற்றும் இந்திய வீட்டுத் திட்டம் என்பன குறித்து யாழ். அரச அதிபரிடம் கேட்டறிந்தனர்.

இதேவேளை, 60 ஆயிரம் வீடுகள் தேவையாக இருப்பதாகவும் இன்னும் முடிந்தளவு யாழ் மக்களுக்கு உதவுமாறும் மேற்படி தூதுவர்களிடம் யாழ். அரச அதிபர் கோரியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X