2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

யாழில் மன அழுத்தம் காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2011 மே 13 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மாவட்டத்தில் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெறுவோரின் தொகை கடந்த நான்கு மாதங்களில் அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் உளநல சிகிச்சைப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்தகால யுத்தத்தின் தாக்கம், குடும்பப் பிரச்சினைகள், அதனுடன் ஒத்த பொருளாதாரப் பிரச்சினைகள், சமூக அந்தஸ்து, பாலியல் தொந்தரவு ஆகியவற்றினால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி அவற்றிலிருந்து விடுபட முடியாமலிருப்பவர்களின் திண்டாடுவோர்களின் தொகை நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.

மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுவதுடன், இந்திய வைத்திய நிபுணர்களின் உதவியுடன்   மன அழுத்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளநல ஆற்றுப்படுத்தல்  சிகிச்சை வழங்கப்படவுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X