2025 மே 22, வியாழக்கிழமை

வெசாக் விடுமுறையில் படையினர்; மீள்குடியேற்றம் ஒத்திவைப்பு

Suganthini Ratnam   / 2011 மே 15 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வெசாக் விடுமுறையில் படையினர் சென்றுள்ளதால் யாழ். மிருசுவில் இராமாவில்,  குடத்தனை ஆகிய இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலுள்ள இடம்பெயர் மக்களின் மீள்குடியேற்றம் இந்த மாத இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

யாழ். மிருசுவில் இராமாவில், குடத்தனை ஆகிய இடைத்தங்கல் நலன்புரி நிலையங்களிலுள்ள 387 குடும்பங்கள வடமராட்சி கிழக்கில்  மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

வடமராட்சி கிழக்கில் முள்ளியான், ஓக்கறுப்பு, வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்வதற்கான அனுமதி பாதுகாப்புத் தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் யாழ். அரசாங்க அதிபர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X