2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வெசாக்தினத்தையொட்டி மதுபான, இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு

Suganthini Ratnam   / 2011 மே 15 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வெசாக் தினத்தையொட்டி மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள், ஊன் அறுக்கும் நிலையங்கள், பந்தைய நிலையங்கள், சூதாட்டக் கூடங்கள் மற்றும் கழகங்கள் அனைத்தையும் மூடுமாறு யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அறிவித்துள்ளார்.

மதுபானக் கடைகள், ஊன் அறுக்கும் நிலையங்கள், பந்தைய நிலையங்கள், சூதாட்டக் கூடங்கள் மற்றும் கழகங்களை   16ஆம் 17ஆம் 18ஆம் திகதிகளிலும்  இறைச்சிக் கடைகளை 17ஆம் 18ஆம் திகதிகளிலும் மூடுமாறும் சிறப்பு அங்காடிகளில் இறைச்சி விற்பனையை நிறுத்துமாறும் யாழ். அரசாங்க அதிபர் கூறினார்.

அரசாங்க நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தமக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X