2025 மே 22, வியாழக்கிழமை

யாழில் களைகட்டும் வெசாக் கொண்டாட்டங்கள்

Suganthini Ratnam   / 2011 மே 16 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நகரில் பொதுநூலகத்திற்கு முன்பாகவுள்ள வீதிகளில் படையினரின் ஏற்பாட்டில் வெசாக் பண்டிகை கொண்டாட்டங்கள் நாளை செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாகவும் பிரமாண்டமான முறையிலும் கொண்டப்படவுள்ளதாக யாழ். படைகளின் தலைமையகம் அறிவித்துள்ளது .

வெசாக் பூரண பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பிரமாண்ட வெசாக் கூடுகளும் வெளிச்ச வீடுகளும் மற்றும் தாகசாந்திப் பந்தல்களும் அன்னதானப் பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலுள்ள படைமுகாம்களிலும்; இராணுவ அலுவலகங்களிலும்; வெசாக் கொண்டாட்டங்களுக்கான கலைநிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இவற்றைக்  யாழ். மக்கள் கண்டுகளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X