Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 மே 17 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் இந்திய உயர் கல்வி நிறுவனங்களின் மாபெரும் கல்விக் கண்காட்சியை யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
யாழ். பொதுநூலகத்தில் இன்றும் நாளையும் இந்த கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது.
இந்தக் கல்விக் கண்காட்சியில் யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,
இந்திய உயர் கல்விக் கண்காட்சியானது இந்தியாவில் யாழ். மாணவர்கள் உயர் கல்வியை கற்பதற்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. யாழ். மாணவர்கள் கல்வியில் உயர்ந்த நிலையில் இருக்கின்றார்கள். அவர்கள் கல்வியில் மென்மேலும் உயர்வடைய இக்கண்காட்சி கல்வியில் உறவுப்பாலமாக அமைந்துள்ளது.
யாழ். இந்திய கல்வி நிறுவனங்கள், யாழ். நூலகத்தில் அலுவலகமொன்றை திறந்து வைத்து யாழ். மாணவர்களுக்கு உயர் கல்வி சார்ந்த விடயங்கள் பற்றியும் தொழில் வாய்ப்புக்கள் பற்றியும் ஆலோசனை வழங்கவேண்டுமென்று அவர் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாநகரசபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ். இந்திய துணைத்தூதுவர் எஸ்.மகாலிங்கம், நீதிபதி ஜோய் மகாதேவன், இந்திய உயர் கல்வி நிறுவனத் தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago