2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இராணுவ வாகன விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2011 மே 17 , மு.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

இராணுவ வாகனத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியானதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். 

கரணவாய் மத்தி கரவெட்டியைச் சேர்ந்த ஆர்.விஜியதாசன் (வயது 20) என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.
சாவகச்சேரியிலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவ வாகனத்துடன் இடையில் மோட்டார் சைக்கிள் குறுக்கிட்டதாலேயே இந்த விபத்து ஏற்பட்டது. நேற்று திங்கட்கிழமை  மாலை சாவகச்சேரி தபால் கந்தோருக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பலியானவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X