2025 மே 22, வியாழக்கிழமை

பனம் வெல்லம் உற்பத்திக்கான தொழிற்சாலை திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2011 மே 18 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ். மாவட்டத்தில் தென்னை மற்றும் பனை மரங்களில் தொழில் செய்பவர்களுக்கான மரம் ஏறும் கருவி அறிமுக நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கோண்டாவில் இணுவில் பனை, தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க அலுவலக கட்டிடத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டிலும் கோண்டாவில் இணுவில் பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் க.செல்வராசா தலைமையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில்,  பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு இதனை அறிமுகம் செய்து வைத்தார்.

அத்துடன், கோண்டாவில் இணுவில் பனை, தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட புதிய பனம் வெல்லம் உற்பத்திக்கான தொழிற்சாலையையும் அமைச்சர் திறந்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X