2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 மே 22 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதியொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

புன்னாலைக்கட்டுவன், ஈவினை பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் லவண்யா (வயது 21) என்பவரின் சடலமே நேற்று சனிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் எவரும் இல்லாத நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் மேற்படி யுவதி காணப்பட்டதாகவும் இது தொடர்பில் உறவினர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி யுவதி,  தந்தை மற்றும் இரு சகோதரர்களுடன் வசித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X