2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இளவாலையில் கத்திமுனையில் வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தி கொள்ளை

Suganthini Ratnam   / 2011 மே 27 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்.  இளவாலைப் பகுதியிலுள்ள வீடொன்றில் இரவு வேளையில் புகுந்த கொள்ளையர்குழு,  வீட்டு உரிமையாளரை அச்சுறுத்தி அங்கிருந்த பொருட்களைக் கொள்ளையடித்துக்கொண்டு  தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கத்திமுனையில் வீட்டின் உரிமையாளரை மிரட்டி  வீட்டிலிருந்த பெறுமதியான இலத்திரனியல் சாதனங்களும் மோட்டார் சைக்கிளும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக  அவர்களின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையர் குழுவினரைத் தேடி வருவதாகவும் அவர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் இளவாலைப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X