2025 மே 21, புதன்கிழமை

ஊடகவியலாளர் கதிரவன் மீதான தாக்குதலுக்கு 'சப்மா' கண்டனம்

Super User   / 2011 மே 31 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளர் எஸ்.கதிரவன் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டமையை சப்மா எனப்படும் தெற்காசிய சுதந்திர ஊடகவியலாளர் சங்கத்தின் இலங்கை கிளை வன்மையாக கண்டிப்பதாக ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பகுதியில் இடம்பெரும் சம்பவங்கள் குறிப்பாக அரச சார்ப்பு மற்றும் துணை ஆயுத குழுக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் இவரால் எழுதப்படும் சர்ச்சைக்குரிய செய்திகளுக்காகவே இவர் தாக்கப்பட்டிருக்கலாம் என சப்மா குறிப்பிட்டுள்ளது.

கடந்த பல வருடங்களாக இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதுடன் கடத்தப்பட்டும் துன்புறுத்தப்பட்டுமுள்ளனர். இது ஜனநாயகம் மற்றும் தகவல் சுதந்திரம் என்பன நேரடியாக பாதிக்கப்படுவதாகவுள்ளது. இது இலங்கை போன்ற ஜனநாயக நட்டுக்கு நல்லதல்ல என சப்மா தெரிவித்துள்ளது.

இந்த குற்றங்களில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை முன்கொண்டு வருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். அவ்வாறில்லாவிட்டால் அவர்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு அப்பாலானவர்களாக இருப்பதாக மக்கள் நினைப்பர்கள் என சப்மா மேலும் குறிப்பிட்டுள்ளது.

31 வயதான ஊடகவியலாளர் எஸ்.கதிரவன் கடந்த மே 28ஆம் திகதி யாழ். இந்து கல்லூரிக்கு அருகில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .