Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 09 , மு.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாநகர சபையினால் தற்போதைய கழிவகற்றலில் காணப்படுகின்ற பிரச்சினையையும் அதனை புதைப்பதற்கு எதிர்நோக்கும் பிரச்சினையையும் கருத்தில் கொண்டு நேற்று புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் சில நடைமுறைகள் பின்பற்றப்படவுள்ளதாக யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபைக்கு பூரண ஒத்துழைப்பு தந்து வாரத்தில் இரண்டு தடவைகள் திண்மக்கழிவுகள் அகற்றும் வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு தங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.
தங்களின் வீடுகளில் சேகரிக்கப்படுகின்ற நாளாந்த கழிவுகளை இரு வகைப்படுத்தி உக்கக்கூடிய கழிவுகள் (சமையலறை தாவரம்) உக்காத கழிவுகள் (பொலித்தீன், லஞ்சீற், சொப்பிங்பாக், பேப்பர், மாபில், கல்) சேகரிக்க வேண்டும். இவற்றில் உக்கக்கூடிய கழிவுகளை வாரத்தில் இரு தடவைகள் தவறும் பட்சத்தில் ஒரு தடவையாவது அகற்றப்படும். உக்காத கழிவுகள் வாரத்தில் ஒரு தடவை அகற்றப்படும்.
தங்களது வீட்டில் சாதாரணமாக சேகரிக்கப்படுகின்ற கழிவுகள் தவிர மேலதிகமானவை கட்டணம் மூலம் அகற்றப்படும். உக்கக்கூடிய கழிவுகளில் உக்காத கழிவுகள் காணப்படுமிடத்து அவை அகற்றப்படமாட்டாது. குறிப்பிட்ட கிழமையில் கழிவகற்றும் வாகனம் வராதவிடத்து 021௩207625 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago