2025 மே 21, புதன்கிழமை

கருவில் சிதைக்கப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஜூன் 19 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். எழுவைதீவுப் பகுதியில் கருவிலேயே சிதைக்கப்பட்ட சிசுவொன்றினுடைய சடலம் பாழடைந்த வீடொன்றிலிருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை   மீட்கப்பட்டதாக  ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று அல்லது நான்கு மாதங்கள் கருவான மேற்படி சிசு இறந்த நிலையில் அப்பகுதியில் காணப்படுவதாக அயலவர்கள் வழங்கிய தகவலையடுத்து, மேற்படி சிசு மீட்கப்பட்டு ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.  

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் தாயை பொலிஸார் தேடி வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .