2025 மே 21, புதன்கிழமை

டெங்கு நுளம்பு பெருகும் வாய்க்கால்கள்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 22 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். கொக்குவில் அம்மன் வீதி தொடக்கம் ஆடியபாதம் வீதியின் கொக்குவில் சந்தி வரையும் குளப்பிட்டி சந்தி தொடக்கம் கே.கே.எஸ் வீதியின் கொக்குவில் சந்தி வரையும் காணப்படுகின்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான  வாய்க்கால்களில் டெங்கின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.

இவ்வாய்க்காலினுள் பற்றைகள் வளர்ந்து காணப்படுவதுடன், நீர் தேங்கக்கூடிய பல கொள்கலன்கள் காணப்படுகின்றன. பல தடவைகள் டெங்கொழிப்பு வாரங்கள் முன்னெடுக்கப்பட்டும் இப்பகுதி எவராலும் இதுவரை கவனிக்கப்படவில்லை. இது தொடர்பாக கொக்குவில் பொது சுகாதார பரிசோதகரிடம் கேட்டபோது, கடந்த டெங்கொழிப்பு வாரத்தின்போது கொக்குவில் இராணுவ முகாமைச் சேர்ந்த  இராணுவத்தினருடன் கொக்குவில் சந்தியிலுள்ள கடை உரிமையாளர்களும் இணைந்து கே.கே.எஸ் வீதியிலுள்ள வாய்க்கால் துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டதாகவும் பிரதேச செயலகத்தில் மாதாந்தம் நடைபெறும் டெங்கொழிப்பு தொடர்பான கூட்டத்தில் பல தடவை இது தொடர்பாக குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த டெங்கொழிப்பு வாரத்திலாவது இதனை துப்பரவு செய்வதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என அப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • நலன் விரும்பி Thursday, 23 June 2011 01:36 AM

    இதுபோன்று கேகாலை மாவட்டத்திலும் டெங்கு ஒழிப்பு என்று கூறி ஜசமையலரை மற்றும் துணிகள் துவைத்த) கழிவு நீரை வெளியே விடாமல் (டெனேஜ் போன்ற ) குழிகளில் தான் இடவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது . இப்படி குழிகள் வெட்டி இடாதவர்களிடமிருந்து தண்டப்பணமும் அறவிடப்பட்டது . ஆனால் தற்பொழுது கழிவு நீர்க்குளிகளிளிருந்து டெங்கு(யுநனநள) பரப்பும் நுளம்பு அல்லாத வேறு பல வகை நுளம்புகள் வெளியே வரத்தொடங்கியுள்ளன.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X