2025 மே 21, புதன்கிழமை

யாழ்ப்பாணத்தில் மின் பொறியியலாளர் பணிமனை

Menaka Mookandi   / 2011 ஜூன் 24 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் துரித கதியில் அனைத்துப் பகுதிகளுக்குமான மின்விநியோக நடவடிக்கையை மேற்கொள்ளும் நிறுவனத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலம் - மின் பொறியியலாளர் அலுவலகம், யாழ்ப்பாணம், கோவில் வீதி, 359/32ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நேற்றுதிறந்து வைக்கப்பட்டுள்ள இந்தப் பணிமனையில் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகள் நடைபெறும்.

அத்துடன் பொது மக்களும் பிரதேச பொது அமைப்புகளும் தங்களது மின்விநியோக நடவடிக்கைகளைப் பற்றித் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் மின்விநியோகத் திட்டத்தை மேற்கொள்ளும் பிரதான அலுவலகம் வவுனியா ஹொறவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X