2025 மே 21, புதன்கிழமை

அராலி சரஸ்வதி மகாவித்தியாலய நூற்றாண்டு விழா சம்பந்தமான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 26 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா அடுத்த வருடம் முதல் வாரத்தில் கொண்டாடப்படவுள்ள நிலையில், அது சம்பந்தமான கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றது.

பாடசாலை அதிபரும் பழைய மாணவர் சங்கத்;தலைவரும் பாடசாலை அபிவிருத்தி சங்கத் தலைவருமான மா.சோமசேகரம் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

பாடசாலையின் வரலாறு அடங்கிய நூற்றாண்டு மலரொன்றை வெளியிடுதென்பதுடன், யாழ். மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும் தீங்கு தீர்மானிக்கப்பட்டது

பாடசாலையின் நூற்றாண்டு மலரினை வெளியிடுவதற்கான இணைப்பாளராக எஸ்.சிவஞானபோதமும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான இணைப்பாளராக பா.தர்மகுமாரனும் தெரிவுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X