Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 26 , மு.ப. 07:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி,ஞானசெந்தூரன்)
யாழ். புத்தூர் கிழக்கு வாதரவத்தைக்கு செல்லும் வழியிலுள்ள விளையாட்டு மைதானத்தின் கால்பந்தாட்ட கோல் கம்பத்தில் இளைஞரொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை பட்டப்பகலில் அடித்துக் கொலை செய்யப்பட்டு தொங்கவிடப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நவக்கிரியைச் சேர்ந்த பாலச்சந்திரன் சற்குணநாதன் (வயது 31) என்ற இளைஞனே மேற்படி அடித்துக் கொலை செய்யப்பட்டு கோல் கம்பத்தில் தொங்கவிடப்பட்டவர் ஆவார்.
இவர் தூக்கில் தொங்கவிடப்பட்ட இடத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில் தேசிய அடையாள அட்டை, தன்னியக்க பணப்பரிமாற்ற அட்டை போன்றன காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை நேரில்ச் சென்று பார்வையிட்ட மல்லாகம் நீதிவான் பிரபாகரன் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
malwanai maindan Monday, 27 June 2011 03:12 AM
இது தான் ஜனநாயகமா ?
(மல்வானை மைந்தன்)
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
20 May 2025