Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூன் 30 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாநகரசபையில் எதிர்கட்சி உறுப்பினர் பரஞ்சோதி மீது தாக்குதல் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மாநகரசபையின் எதிர்கட்சித் தலைவர் முடியப்பு றெமிடியஸ் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க யாழ்.நகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா உட்பட ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் சேர்ந்து தீர்மானித்துள்ளதாக யாழ்.நகர மேயர் தெரிவித்தள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் தண்ணீர் போத்தலால் மாநகர உறுப்பினரைத் தாக்கியதுடன் இவர் மீது அநாகரியமான கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதான குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் கேட்டபோது,
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த மாநகர உறுப்பினர்களும் தனக்கு தெரிவிக்கவில்லை எனவும் தான் தற்போது மருதங்கேணியில் உள்ளூராட்சிசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருப்பதால் இதுபற்றி எதுவும் தெரியாது எனவும் இப்படியான ஒரு சம்பவம் நடந்திருந்தால் அதுபற்றிய விசாரணைகளை யாழ்.மாநகர சபை எதிர்கட்சி உறுப்பினர்களை அழைத்து விசாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு இப்பிரச்சனைக்காக இன்று வியாழக்கிழமை இரவு யாழ். தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் யாழ். மாநகரசபை எதிர்கட்சி உறுப்பினர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
20 May 2025