2025 மே 21, புதன்கிழமை

மக்களுக்கு எதுவும் செய்யாமல் அரசாங்கத்தின் வடக்கு அபிவிருத்திகளை த.தே.கூட்டமைப்பினர் குறைகூறுகின்றனர

Super User   / 2011 ஜூலை 02 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

 'தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் வடக்கில் அரசாங்கம் செய்யும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை குறைகூறுபவர்களாக இருக்கின்றார்களே தவிர, அம்மக்களுக்கு அவர் எதுவுமே செய்வதில்லை' என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

இன்று சனிக்கிழமை மாலை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் யாழ்.மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையியேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'இந் நாட்டின் சிறார்கள் திசைமாறிப் போகாமல் அவர்களுக்கு அறிவூட்டி அவர்களை நாட்டின் நற்பிரஜைகளாக்கும் பாரிய போறுப்பை முன்பள்ளி ஆசிரியர்கள் செய்து கொண்டிருக்கிறார். இவர்களின் இந்த நடவடிக்கையால் நாடு அபிவிருத்தியடையும் என நம்புகின்றேன்

யாழ்.மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களின் நிலமைகளை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது. அவர்களின் தொழில் நிலமைகளுக்குரிய வேனதங்கள் வழங்குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஜனாதிபதியினால் பெரும் முயற்சியின் காரணமாக நாட்டில் சமாதானம் உருவாக்கப்பட்டுள்ளது இந்த சமாதானத்தை எல்லோரும் சேர்ந்து நிரந்தர சமாதானமாக பாதுகாக்கவேண்டும்' என்றார்.

இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறுவர் அபிவிருத்தி பெண்கள் வலுவூட்டல் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் கிஸ்புல்லா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ சந்திரசிறி, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் யாழ்.நாகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் வடமாகாண அலுவல்கள் உத்தியோகத்தர்கள், யாழ்.மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X