Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 03 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
"கண்ணீருடனும் துக்கத்துடனும் முகாம்களில் தங்கியிருந்த மக்களின் வாழ்வியலுக்கு இன்றுடன் விடிவு காலம் பிறந்துள்ளது. தங்களது செந்த இடத்திற்கு மீண்டும் நாங்கள் உங்களைக் கொண்டுவந்து சேர்த்துள்ளோம். உங்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு இன்று வழி திறக்கப்பட்டுள்ளது" என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்த்தார்.
இன்று ஞயிற்றுக்கிழமை வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராமத்தில் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றும் போது,
"உலக நாடுகளிலேயே குறுகிய காலத்திற்குள் கண்ணிவெடிகளையும், குண்டுகளையும் அகற்றிய நாடுகளில் இலங்கை தான் முதலிடத்தில் உள்ளது. ஜரோப்பாவில் கூட ஏழு ஆண்டுகள் சென்றது. நாங்கள் நவீன உபகரணங்களை பயன்படுத்தி இராணுவ பொறியியலாளர்களின் அர்பணித்த சேவையின் மூலம் கண்ணி வெடிகளையும் நவீன குண்டுகளையும் மீட்டுள்ளோம்.
இந்த பிரதேசம் முழுவதும் கண்ணிவெடிகள் சூழ்ந்த பிரதேசமாகும் மக்களை மீளகுடியேற்ற வேண்டும் என்பதற்காக இராணுவ பொறியியலாளர்களின் மிதிவெடி அகற்றும் பிரிவினரின் உதவியுடன் இப்பணி சாத்தியமானது.
இங்கு பாடசாலைகள், வைத்தியசாலைகள், கூட்டுறவு சங்கங்கள், போக்குவரத்து வசதிகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு ஏதும் குறையிருக்குமாயின் இராணுவத்தினரிடம் தெரிவியுங்கள் அவர்கள் உங்களுக்கு உதவி புரிவார்கள். இராணுவத்தினரின் நிதியுதவியில் மிகவும் அழகான 10 வீடுகள் உங்களுக்காக கட்டப்பட்டு உங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
உங்களது எதிர்காலத்திற்காக நாங்கள் என்றும் உங்களோடு இருப்போம் நீங்கள் எங்களை மறந்திடவேண்டாம்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago