Menaka Mookandi / 2011 ஜூலை 04 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
இலங்கை நிர்வாக சேவையைச் சோந்த 140 பயிற்சியாளர்கள் யாழ்ப்பாணத்தில் தமது பயிற்சியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று திங்கள் கிழமை காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வினை வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆம்பித்து வைத்துள்ளார். இந்நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், வடமாகாண ஆளுநரின் செயலாளர் ஆ.ரங்கராஜா முற்றும் யாழ்.பிரதேச செயலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
தமது ஒரு மாதகால பயிற்சியை யாழ்ப்பாணத்தில் இவர்கள் தங்கியிருந்து இக்காலத்தில் கிராம அலுவலர் பிரிவுகளில் தங்கி நிற்பதுடன் தமிழ் மொழியைக் கற்பதுடன் தமிழ் மக்களுடைய கலை கலாசாரப் பண்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .