Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 06 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடக்கில் உள்ளூராட்சி தேர்தல் கடமைகளில் இராணுவத்தை ஈடுபட்டுத்தி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை அரசாங்கம் குழப்பி வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
தேர்தல் வன்முறைகளில் இராணுவம் ஈடுபட்டுவதால் வடக்கில் ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்த முடியாத சூழல் தற்போது உருவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இன்று புதன்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அளவெட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது அடாவடித்தனத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை. இராணுவத்தினரின் இச்செயற்பாடுகள் தொடர்பாக எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது எமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவத்தினரின் ஜனநாயக விரோத போக்குகள் தொடர்ந்தால் அவர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்களை இணைத்து ஜனநாயக வழியிலான போராட்டங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முன்னெடுக்கவுள்ளனர்.
அரச இயந்திரமானது முழுப் பலத்தையும் பிரயோகித்து இந்த உள்ளுராட்சி தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதற்காக இராணுவத்தை களத்தில் இறக்கியுள்ளது. ஜனநாயக ரீதியில் நடைபெற உள்ள உள்ளூராட்சி தேர்தலில் த.தே.கூட்டமைப்பின் வெற்றியை வன்முறை மூலம் முறியடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றார்.
Saleem Wednesday, 06 July 2011 09:48 PM
இதுதான் லிபிய அதிபர் கடாபியின் ஜனநாயக தேர்தல் முறை.
Reply : 0 0
AJ Wednesday, 06 July 2011 10:43 PM
காடபி தோழர் தான் இங்கும் ஆட்சி செய்கிறார் அதனால் இங்கு அதிசியப்பட ஏதும் இல்லை.
எப்படியும் இந்த தேர்தலில் இவர்களை தோல்வி அடைய செய்து உலகிக்கு ஒரு கண்துடைப்பு நாடகத்தை செய்ய வேண்டும்.
அது தான் இவை எல்லாம் நடக்கிறது. ஆனால் மக்கள் தெளிவாக தங்களுடைய அபிலாசையை காட்டுவார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
2 hours ago
4 hours ago
5 hours ago