Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 06 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
இலங்கையில் சர்வமத ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைந்த சமூக வெளிப்பாட்டினூடாக மனிதநேய தீர்வுகளை சாத்தியமாக்கல் கூட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு ஆரியகுளம் சந்தியிலுள்ள நாகவிகாரை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இதில் பார்வையற்றோருக்கு கண்பரிசோதனை செய்து மூக்குக் கண்ணாடி இலவசமாக வழங்குவதற்கான நாளினைத் தீர்மானித்தல், தனியார் பேருந்துக் கட்டணம், போக்குவரத்தில் ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றை எழுத்து மூலம் அதன் தலைவருக்கு சமர்ப்பிப்பது பற்றியும் கலாசார சீரழிவு குறிப்பாக எயிட்ஸ் போன்றவற்றிலிருந்து எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்றுவது எப்படி? என்பது பற்றியும் கலந்துரையாடப்படவுள்ளது.
அத்துடன் வீதி நாடகம், வடமாகாண ஆளுநருடனான சந்திப்பில் முன்வைக்க வேண்டிய விடயங்கள், வன்னி நிலப்பரப்பில் கறுவா செய்கையை மேற்கொள்ளல் போன்ற விடயங்களும் மேற்படி செயற்குழு கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago