Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஜூலை 07 , மு.ப. 05:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான முன்னாள் பெருந்தலைவர் சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் மூன்றாவது குருபூசை வைபவம் எதிர்வரும் 11ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் தேவஸ்தான தலைவர் செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுகன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் காலை 9 மணிக்கு ஆலயத்தில் விசேட பூசை, அன்னையின் நினைவாலயத்தில் வழிபாடு, அன்னையின் உருவச்சிலை வழிபாடு, திருமுறை மண்டபத்தில் விசேட பூசைவழிபாடு, திருமுறைப்பாராயணம், சிறப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து பேராசிரியர் அ.சண்முகதாஸ் நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.
திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிய மூன்றாம் திருமுறை மலர் வெளியீடு இடம்பெறவுள்ளது. இதில் முதற் பிரதியை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான உப தலைவர் ச.ஆறுமுகநாதன் பெற்றுக் கொள்வார். வெளியீட்டுரையை இணுவில் மத்திய கல்லூரி இளைப்பாறிய அதிபர் சி.திருஞானசம்பந்தப்பிள்ளை நிகழ்த்தவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago