Kogilavani / 2011 ஜூலை 11 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
சர்வதேச மிதிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடுவதற்கான சகல வழிமுறைகளையும் யுனிசெவ் நிறுவனம் இலங்கை அரசிற்கு எடுத்துக் கூறியிருப்பதாகவும் இலங்கை இவ் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக யுனிசெவ் நிறுவனத்தின் மிதிவெடி செயற்திட்ட தொழில்நுட்ப ஆலோசகர் செபஸ்ரியன் கஸாக் தெரிவித்துள்ளார்
இன்று திங்கட்கிழமை காலை யாழ். கிறின் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மிதிவெடி தடை ஒப்பந்தத்தில் ஜக்கிய நாடுகள் தேசிய மட்ட பங்குதாரராக இருக்கின்றார்கள். அவர்கள் இந்த ஒப்பந்தத்தின் சாத்தியப்பாடான வழிமுறைகள் பற்றி ஆலோசித்து வருகின்றார்கள். இலங்கை இச் சர்வதேச மிதிவெடி தடை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு இந்தச் சூழல் ஏற்றதாக இருக்கிறது.
மிதிவெடி தடை ஒப்பந்தம் குறித்த சர்வதேச மட்டத்திலான கலந்துரையாடல் எதிர்வரும் நவம்பர் மாதம் கம்போடியாவில் நடைபெறவுள்ளது. இதில் 156 நாடுகள் கலந்துக்கொள்ளவுள்ளன. இக்கலந்துரையாடலில் இலங்கையில் இருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இலங்கை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் மூலம் இருப்பிலுள்ள மிதிவெடிகள் அனைத்தையும் அழிக்கமுடியும். அத்தோடு மிதி வெடிகள் இல்லாத நாடாக இலங்கையை மாற்றமுடியும் என அவர் கூறினார்.
33 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago