Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 13 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தில் நேர்மையான நீதியான தேர்தல் நடைபெறுவதற்கு அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென உதவித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.முகமட் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை யாழ். உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணத்தில் தேர்தல் விதிகள் மீறப்படுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த முறைப்பாடுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் உண்மையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படுவதாகவிருந்தால் முறைப்பாடு செய்யுங்கள். அதன் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூடிய விரைவில் விசாரணைகளை மேற்கொள்வோம் என்றார்.
இதேவேளை, யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவின் பத்மதேவ தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் மற்றும் முறைப்பாடுகள் நிறையக் கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம். உண்மையில் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை எமக்கு தெளிவாக தாருங்கள் நாங்கள் உடனடியாக சந்தேக நபர்களைக் கைதுசெய்கின்றோம் என்றார்.
இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், தமிழரசுக் கட்சிப் பிரதிநிதிகள், ஈ.பி.டி.பி. கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சுயேட்சைக்குழு பிரதிநிதிகளெனப் பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
40 minute ago
44 minute ago
46 minute ago