2025 மே 20, செவ்வாய்க்கிழமை

விசேட தேவை உடையவர்களை வலுப்படுத்தும் செயற்றிட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 29 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

விசேட தேவை உடையவர்களை வலுப்படுத்தும் செயற்றிட்டமொன்று உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் நேற்றுமுன்தினம் புதன்கிழமையும் நேற்று வியாழக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டன.

உடுவில் பிரதேச மாநாட்டு மண்டபத்தில் சமூகசேவை அலுவலர் எஸ்.சுரேஸ்குமார் தலைமையில்  நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசியமொழிகள் சமூக மேம்பாட்டு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.எல்.எம்.ஹாசிம், சமூகசேவைகள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் எம்.சி.எல்.பெர்ணான்டோ மற்றும் வளவாளர்களாக எம்.ஆர்.சாந்தகுமார், மாசா பண்டார, நிலுகா கேதீஸ்வரன், யாழ் மாவட்ட இனைப்பாளர் என்.ன்ஐனனி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இச்செயலமர்வில் விசேட தேவைப்பாடு உடையவர்களுடன் அவர்களை பராமரிப்பவர்கள் மற்றும் சமுதாய மட்ட புனர்வாழ்வுத் தொண்டர்களுமென சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.      


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X