Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தன் ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழாவின்போது ஐந்து பேரின் தங்க ஆபரணங்கள் திருட்டுப் போயுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை முறையிடப்பட்டுள்ளது.
ஆலய சூழலில் சனநெரிசலைப் பயன்படுத்தி இங்கு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆலய வழிபாடுகளுக்கு செல்லும் பக்தர்கள் தங்க ஆபரணங்கள் அணிவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கோப்பாய் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்
ஆலயத்திற்கு வரும் அதிகமான பக்தர்களுடன் பக்தர்களாக சேர்ந்து திருடர்களும் வருவதாகத் தெரிவித்த பொலிஸார், திருட்டுச் சம்பவம் இடம்பெறுமாகவிருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் உடனடியாக முறையிடுமாறும் தெரிவித்துள்ளனர். அத்துடன், நல்லூர் ஆலய வீதிகளில் கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரிடமும் திருட்டுச் சம்பவங்கள் குறித்து முறையிடலாமெனவும் பொலிஸார் கூறினர்.
திருடர்கள் குறித்து பக்தர்கள் எச்சரிகையாக இருக்குமாறு கோப்பாய் பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago