2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்த கிராமங்கள் தோறும் பாதுகாப்புக் குழு: யாழ்.பொலிஸ் அத்தியட்சகர்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 06 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசகி)
யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலங்களாக இடம்பெற்றுவரும் அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் கிராமங்கள் தோறும் பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 25 அங்கத்தவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர் என யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நேவின் பத்மதேவா தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றுமாலை இடம்பெற்ற சமூகப் பொலிஸ் பிரிவினது நிர்வாக ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்தவித காரணங்களுமின்றி சிலர் திட்டமிட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் கிறீஸ் மனிதன் வதந்தியை பரப்பி வருகின்றனர். இந்த வதந்திகளினால் மக்கள் வீதிகளில் ஒன்று கூடி கலவரங்களில் ஈடுபடுகின்றனர். கலவரங்களைக் கட்டுப்படுத்த பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் சம்பவ இடத்துக்குச் சென்றால் அவர்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர்.

இதனால் அவர்களும் பதில் தாக்குதலில் ஈடுபடவேண்டி ஏற்படுகிறது. வதந்திகளை நம்பி கலவரங்களில் ஈடுபடும் அப்பாவி பொதுமக்கள் அடித்துக்காயப்படுத்தப்படுகின்றனர். இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்குடனேயே இந்தப் பாதுகாப்புக்குழுக்களை கிராமங்கள் தோறும் அமைக்க நாம் தீர்மானித்துள்ளோம்.

அரச அதிபர், பிரதேச செயலர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதேச செயலர்கள் ஆகியோர் அங்கத்தவர்களாக செயற்படுவார்கள். இக்குழுவின் கீழ் ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் செயற்பாட்டுக் குழுவென்னும் பெயரில் 25 உறுப்பினர்களை உள்ளடக்கியதாக சிவில் பாதுகாப்புக் குழுவொன்று செயற்படவுள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X