2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

இனந்தெரியாத நபரின் தாக்குதலில் இளைஞன் காயம்; ஏழாலையில் சம்பவம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 07 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

ஏழாலை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபரொருவரின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் தெல்லிப்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏழாலை மேற்கைச் சேர்ந்த ஞா.நவீனன் (வயது 22) என்ற இளைஞரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார். அவரது நெஞ்சுப் பகுதி பலத்த காயத்துக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
 
இன்று அதிகாலை 3 மணியளவில் மலசலகூடம் செல்வதற்காக வீட்டின் கதவைத் திறந்து வெளியில் வந்துள்ள மேற்படி இளைஞன், வீட்டு முற்றத்தில் நபரொருவர் மறைந்து இருப்பதைக் கண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தன்னை சுதாகரித்துக் கொள்ள முயற்சித்த மேற்படி சந்தேக நபர், இளைஞனின் நெஞ்சுப் பகுதியில், ஆயுதமொன்றினால் தாக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்நபரைப் பிடிப்பதற்கு குறித்த இளைஞன் முயற்சித்த போதிலும் அது பயனளிக்காத நிலையில் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X