Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 10 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். புத்தூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆணின் சடலம் மோசமாக உருக்குலைந்திருந்த போதும் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர் இப்பகுதியில் வீசப்பட்டிருக்கலாம் எனவும் தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மீசாலை வீதிப்பகுதியில் புத்தூர் சந்தியிலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள விதவாணி பகுதியிலேயே இச்சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசிய நிலையில் வீதியால் பயணித்த சிலர் அங்கு சென்று பார்வையிட்ட வேளையிலேயே சடலத்தினைக் கண்டு பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அச்சுவேலிப் பொலிஸாரால் மீட்டெடுக்கப்பட்ட சடலம் நேற்று இரவு யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையினில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று சனிக்கிழமை பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளதாகவும் அச்சுவேலிப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .