2025 மே 19, திங்கட்கிழமை

ஊர்காவற்றுறையில் இனந்தெரியாத நபரின் கத்திக்குத்தில் இளைஞன் படுகாயம்

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 10 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். ஊர்காவற்துறை பருத்தியடைப்பில் இனந்தெரியாத நபரொருவரின் கத்திக் குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஊர்காவற்துறை பருத்தியடைப்பில் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

ஊர்காவற்துறை பருத்தியடைப்பு பகுதியில் பெண்கள் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த இனம் தெரியாத மனிதனைக் கண்ணுற்ற பெண்கள் கூக்குரல் இட்டபோது அந்நபரை துரத்திச் சென்ற இளைஞன் ஒருவன் குறித்த இனந்தெரியாத நபரின் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.

எஸ்.பீற்றர் (வயது 28) என்பவர் படுகாயமடைந்த நிலையில் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X