2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

படையினரின் அனுமதிக்காக காத்திருக்கும் ஊரணி பிரதேச மீள்குடியேற்றம்

Super User   / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். ஊரணி பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கு அனுமதிக்குமாறு யாழ். படைகளின் கட்டளை தளபதி மகிந்த ஹத்துருசிங்காவிடம் கோரியுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழ். படைகளின் கட்டளை தளபதியின் அனுமதிக்காக காத்துக்கொண்டிருப்பதாகவும் மக்களை மீளக்குடியேற்றி அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு தன்னாலான உதவிகளை செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X