2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்க அலுவலகம் யாழில் திறப்பு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 28 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாண மாவட்ட இலங்கை வங்கி ஓய்வூதியர் சங்க அலுவலகம் கடந்த ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்விற்கு தலைமை தாங்கிய முன்னாள் வடமாகாண உதவி பொது முகாமையாளரும் ஓய்வூதியர் சங்க தலைவருமான என்.சிவரத்தினம் இங்கு உரையாற்றும்போது,

'எமது சங்கம் இலங்கை வங்கி முகாமைத்துவத்துக்கும் ஓய்வூதியருக்கும் இடையில் பாலமாக தொழிற்பட்டு ஓய்வூதியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உழைக்கும். வீடமைப்பு கடன் எடுத்து கட்டிய வீடுகள் பாதுகாப்பு வலயத்துக்குள் போன நிலைமையிலும் இக்கடன் தொடர்ந்தும்  இலங்கை வங்கி ஓய்வூதியர்களின் இளைப்பாற்று சம்பளத்திலிருந்து கழிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என அவர் கூறினார்.

வேறு திணைக்கள ஊழியர்களும் இவ்வாறான ஓய்வூதியர் சங்கங்களை அமைப்பதன் மூலம் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .