Kogilavani / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குடாநாட்டில் வாகன விபத்துக்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.
யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழ்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போக்கவரத்து விதிகளை மீறிச் செயற்படுவதன் காரணமாக யாழ்.குடாநாட்டில் வாகன விபத்துக்களின் தொகை அதிகரித்துள்ளது. ஒருநாளைக்கு 12 தொடக்கம் 15 வரை வாகன விபத்துக்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன. வாகனங்களை செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாகவும் பொறுப்புக்களோடு நடந்து கொள்ளவேண்டும்.
வீதி விபத்துக்களைத் தடுப்பதற்குரிய பொறிமுறைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதுடன் சாரதிகள் போக்குவரத்து விதி முறைகளை சரியான முறையில் பின்பற்றி வானகங்களைச் செலுத்தி உயிர்களையும் சொத்துக்களையும் பாதுகாக்குமாறு யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பெறுப்பதிகாரி சமன் சிகேர இதன்போது கேட்டுகொண்டார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago