Kogilavani / 2011 ஒக்டோபர் 23 , மு.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
வட மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் நடத்தப்பட்ட வர்ண இரவுகள் நிகழ்வு மிகவும் கோலாகலமாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
வட மாகாண கல்வி பண்பாட்டு அலுவலகள் மற்றும் விளையாட்டுத் திணைக்கள அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வடமாகாண ஆளுனர் ஜீ.எ.சந்திரஸ்ரீ பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
இதன்போது, தேசிய மட்டத்தில் பதக்கங்களை வென்ற வீர, வீராங்கனைகளுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் விசேட பரிசாக இலங்கை தேசிய அணியின் வலைப்பந்தாட்ட வீராங்கனையும் சர்வதேச மட்டத்தில் சிறந்த கோல் எய்துபவராக தெரிவு செய்யப்பட்டவருமான யாழ். புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சிவலிஙகம் தர்சினிக்கு வடமாகாண விளையாட்டுத் தினை;ககளத்தினால் பணப்பரிசில் வழங்கப்பட்டதுடன்இலங்கை வங்கியினால் வழங்கப்பட்ட மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட்டது.
இதேவேளை இப்போட்டியில் விருந்தினர்களாக கலந்துகொண்ட வட மாகாண ஆளுனர், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
.jpg)
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago