2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் : முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராஜா

Super User   / 2011 ஒக்டோபர் 29 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யுத்தத்திற்கு பின்னரான யாழ்.மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் சட்டமும் ஒழுங்கும் யாழில் சரியான முறையில் நிலைநாட்டப்பட்டு மனித உரிமைகள் பேணப்பட வேண்டும் என முன்னாள் பொலிஸ் மா அதிபரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வடமாகாண ஆணையாளர் ஈ. ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் ஏற்பாடு செய்த 'சிவில் சமூகமும் மனித உரிமைகளும் என்ற தொனிப் பொருளில் யாழ்.கிறின் கிலாஸ் விடுதியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

கடந்த 1960 ஆம் ஆண்டுகளில் யாழ்.மக்கள் எவ்விதம் மனித உரிமைகளுடன் வாழ்ந்தார்களோ அதே நிலை மீண்டும் கொண்டுவரப்படவேண்டும் அப்போது தான் யாழ்.மக்கள் நிம்மதியாக சுகந்திரமாக வாழமுடியும்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரகாரம் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புக்கள் முக்கியமானவை ஆனால் எங்களின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறைந்தும் காணப்படுகிறது.

நாங்கள் வரையறைகளுக்குள் நின்றுதான் வேலை செய்யவேண்டியிருக்கிறது எங்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும். எங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது அரசுடன் இணக்கப்பட்டுடன்தான கடமைபுரிகின்றது

ஜ.நா. முகவர் நிறுவனங்கள் எங்களுக்கு உதவிபுரிகின்றனர் அவர்கள் மனித உரிமையைப் பேணுவதில் மிக அக்கறையாக இருக்கினறனர் என்றார்
இந்த நிகழ்வில் சிவில் சமூகப்பிரதிநிதிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


மூன்று நிரந்தர உத்தியோகத்தர்களுடன் ஏழு இலச்சம் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய நிலை

இமனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் உரையாற்றுகையில் தேவேளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகம் மூன்று நிரந்தர உத்தியோகத்தர்களுடன் ஏழு லட்சம் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

'எங்களுடன் சிவில் சமூகப்பிரதிநிதிகள் இணைந்து வேலைசெய்ய வேண்டும் அப்போதுதான் யாழ். மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் சரியான பாதுகாப்பு வழங்க முடியும்.

சிவில் சமூகங்களை இணைத்து மனித உரிமைகள் தொடர்பாக எதிர்காலத்தில் பல வேலைத் திட்டங்களைச் செய்யவுள்ளோம். சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள், உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நடமாடும் சேவைகளைச் செய்யயுள்ளோம்.

கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பாகவும், பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி அமுலாக்கம் தொடர்பாகவும் உயர் அதிகாரிகளிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

அண்மைக்காலங்களில் யாழ். குடாநாட்டில் எமக்குக் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் அனைத்தும் அடிப்படை உரிமைகள் தொடர்பான தத்துவத்திற்கு அப்பால் சிறுவர்கள், பெண்கள் உரிமை மீறல்களாக இருக்கின்றன.

பெண்கள், சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான மீறல்களைப் பாதுகாப்பதற்கு சிவில் சமூகங்கள் எமது ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X