Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 30 , மு.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 'மனிதநேயத்திற்கான மக்கள் அமைப்புக்களின் ஒன்றியம்' என்ற பெயரில் மக்கள் நலன் சார்ந்த சமூக அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நேற்று சனிக்கிழமை இந்த அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசசார்பற்ற இணையங்களின் நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது வருகை தந்திருந்த அனைவரது ஏகோபித்த வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது .
இவ் அமைப்பின் இணைப்பாளராக அரசசார்பற்ற இணையங்களின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளராக பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் சு.தவபாலசிங்கம், செயற்குழு உறுப்பினர்களாக சர்வதேச இந்துகுருமார் ஒன்றிய தலைவர் வணக்கத்துக்குரிய சபா.வாசுதேவக்குருக்கள், கிறிஸ்தவ மதகுரு வணக்கத்துக்குரிய பிதா.ரவிச்சந்திரன், சைவமதகுரு, இஸ்லாமிய மௌலவி எம்.எ.பைசர் (மதனி), கொட்டோடை மீனவர்சங்க தலைவர் காண்டீபன், வடஇலங்கை பத்திரிகையாளர் சங்க செயலாளர் பொன்ராஜா, சனசமூக நிலையங்களின் செயலாளர் பொன்.கனகரத்தினம், மக்கள் சக்திய அமைப்பின் உபதலைவர் அரியகுட்டி இந்திரராசா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ் அமைப்பிலே எதிர்வரும் காலங்களில் தமிழ் பேசுகின்ற மக்கள் வாழ்கின்ற எல்லா இடங்களிலும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதிநிதிகள் உள்வாங்கப்படுவதுடன் தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதோடு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உரிய அழுத்தங்களினை வழங்கி அப்பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதே இவ் அமைப்பின் நோக்கமாகும்.
neethan Sunday, 30 October 2011 10:46 PM
புலம் பெயர்ந்து வாழும் நமது மண்ணின் மைந்தர்களையும் இவ் அமைப்பினுள் உள்வாங்கினால், காத்திரமான நல்ல பணிகளை செய்யலாமே?
Reply : 0 0
iklad ila venthan Monday, 31 October 2011 04:05 AM
இந்த ஒன்றியம் நன்றாக என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .